ஆன்மிகம்

ராசிகளில் சூரிய ஒளி + "||" + Sunlight in Rasi

ராசிகளில் சூரிய ஒளி

ராசிகளில் சூரிய ஒளி
கர்நாடக மாநிலம் சிருங்கேரி என்ற இடத்தில் சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது.
சாரதாம்பாள் ஆலயத்தில் மூலவர் கருவறையின் முன்பாக ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் 12 தூண்களிலும், 12 ராசி களுக்கான அதிபதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் என்ன விசேஷம் என்றால், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.