இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 26 March 2019 11:29 AM GMT (Updated: 26 March 2019 11:29 AM GMT)

26-3-2019 முதல் 1-4-2019 வரை

26-ந் தேதி (செவ்வாய்)

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மர வாகனத்தில் கண்ணாடி அலங்கார சேவை.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

நத்தம் மாரியம்மன் கோவில் பொங்கல் பெரு விழா, மாலையில் பூக்குழி விழா.

உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் பவனி.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தீர்த்தவாரி, தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

சமநோக்கு நாள்.

27-ந் தேதி (புதன்)

மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க சேவை, அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி அனுமன் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.

நத்தம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு.

சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

28-ந் தேதி (வியாழன்)

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு, இரவு சுவாமி தாயாருடன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரத்தில் திருக்காட்சி.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

கீழ்நோக்கு நாள்.

29-ந் தேதி (வெள்ளி)

தென்திருப்பேரை பெருமாள் ரத உற்சவம்.

 உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர வாகனத்தில் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் புறப்பாடு.

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.

கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (சனி)

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளி குதிரையிலும், தாயார் அலங்கார படிச்சட்டத்திலும் ஆற்றங்கரையில் வேடர்பரி உற்சவம்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பட்சிராஜன் அலங்காரம்.

 மேல்நோக்கு நாள்.

31-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

சர்வ ஏகாதசி.

ஒழுகை மங்கலம் மாரியம்மன் கோவில் உற்சவம், அன்ன வாகனத்தில் வீதி உலா.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கோவில் ரத உற்சவம்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.

 தாயமங்கலம் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.

மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (திங்கள்)

திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

ஒழுகை மங்கலம் மாரியம்மன் யாழி வாகனத்தில் பவனி.

 உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் சப்தாவரணம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

 மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வத பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.

சென்னை மல்லீசுவரர் விடாயாற்று உற்சவம்.

முகூர்த்தநாள்.

மேல்நோக்குநாள்.

Next Story