கனவுகளை நிறைவேற்றும் சுனபா யோகம்


கனவுகளை நிறைவேற்றும் சுனபா யோகம்
x
தினத்தந்தி 24 May 2019 1:06 PM IST (Updated: 24 May 2019 1:06 PM IST)
t-max-icont-min-icon

சுனபா யோகத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே புத்திக்கூர்மையும், புகழும் உடையவராக இருப்பார்கள்.

ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஒன்று தனியாக இருப்பது அல்லது அவை ஒன்றாக சேர்ந்து இருப்பது ஆகிய நிலைகளில் சுனபா யோகம் ஏற்படுகிறது. சந்திரன் கடகத்தில் நிற்க இரண்டாம் வீடான சிம்மத்தில் குரு, சுக்ரன் போன்ற சுபகிரகங்களில் ஏதேனும் ஒன்று தனியாகவோ அல்லது இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருந்தாலும் அதிக நன்மைகள் உண்டாகும் என்பது பல ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். சுனபா யோகத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே புத்திக்கூர்மையும், புகழும் உடையவராக இருப்பார்கள். பார்வை மற்றும் சப்தம் ஆகியவற்றால் கிடைக்கும் சந்தோஷங்களால் மகிழ்வார்கள்.

பிறரை வசீகரிக்கும் முகம் மற்றும் தோற்றம், அமைதியான சுபாவம் மற்றும் நேர்மறையான குணங்கள் நிறைந்தவர் களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ள கூடிய திறன் கொண்டவர்கள். பூர்வீக சொத்து இருந்தாலும், சுய முயற்சியால் செல்வத்தை ஈட்டுவார்கள். கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதால் சில கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். சிலர் திரைப்பட நடிகர்களாகவும் இருப்பார்கள். அரசாங்க பணியில் குறைந்த காலத்திலேயே பிறரை நிர்வகிக்க கூடிய அதிகாரம் மிகுந்த பதவிகளை பெறுவார்கள். இளமையில் சிறிது கஷ்டப்பட்டாலும் பிற்கால வாழ்க்கை இன்பமானதாக இருக்கும்.

1 More update

Next Story