இந்த வார விசேஷங்கள் : 31-ந் தேதி ஆடி அமாவாசை, 3-ந் தேதி ஆடிப்பெருக்கு


இந்த வார விசேஷங்கள் : 31-ந் தேதி ஆடி அமாவாசை, 3-ந் தேதி ஆடிப்பெருக்கு
x
தினத்தந்தி 30 July 2019 10:35 AM GMT (Updated: 30 July 2019 10:35 AM GMT)

30-7-2019 முதல் 5-8-2019 வரை

30-ந் தேதி (செவ்வாய்)

மாத சிவராத்திரி.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க விருட்ச சேவை.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.

நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரம், இரவு வெள்ளி விருட்ச சேவை.

மன்னார்குடி செங்கமலத் தாயார் கருட வாகனத்தில் திருவீதி உலா.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிங்க வாகனத்தில் உலா வருதல்.

மேல்நோக்கு நாள்.

31-ந் தேதி (புதன்)

ஆடி அமாவாசை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.

திருவாடானை சிநேக வள்ளியம்மன், வெண்ணெய் தாழி சேவை, இரவு கமல வாகனத்தில் அம்மன் வீதி உலா.

நயினார்கோவில் சவுந்திரநாயகி, வீணை கான சரஸ்வதி அலங்கார காட்சி, இரவு வெள்ளி கிளி வாகனத்தில் புறப்பாடு.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி தேரில் பவனி.

சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முளைகொட்டி உற்சவம் ஆரம்பம்.

மதுரை கள்ளழகர் கருட சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியலில் பவனி, ரெங்கமன்னார் யானை வாகனத்தில் வீதி உலா.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கயிலாய வாகனத்தில் வீதி உலா, இரவு மகிஷாசூரன் சம்ஹாரம்.

நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் சிவலிங்க பூஜை செய்தல்.

மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (வெள்ளி)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி. ஆண்டாள் மடி மீது ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

படைவீடு ரேணுகாம்பாள் திருவீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

ஆடிப்பெருக்கு.

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம், தங்கச் சப்பரத்தில் அம்மன் பவனி.

அங்கமங்கலம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.

அனைத்து நீர் நிலைகளிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை பல்லக்கில் பவனி.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் பீங்கான் ரத உற்சவம்.

கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரத உற்சவம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலத்தில், தவழ்ந்த கோலத்தில் தபசு மண்டபம் எழுந்தருளல், சுவாமி தங்க விருட்ச சேவை.

மன்னார்குடி செங்கமலத் தாயார் ரத உற்சவம்.

கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

கருட பஞ்சமி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் திருக்கல்யாண உற்சவம்.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி விமானத்தில் புறப்பாடு.

மதுரை மீனாட்சி அம்மன் விருட்ச சேவை.

சமநோக்கு நாள்.

Next Story