அத்திவரதர் : உயரும் உண்டியல் வசூல்


அத்திவரதர் : உயரும் உண்டியல் வசூல்
x
தினத்தந்தி 6 Aug 2019 12:29 PM GMT (Updated: 2019-08-06T17:59:08+05:30)

பொதுவாக ‘பணக்கார சாமி’ என்று திருப்பதி ஏழுமலையானைத் தான் சொல்வார்கள்.

ஏனென்றால், அவருக்குத்தான் தினமும் கோடி கோடியாக பணம் காணிக்கையாக செலுத்தப்படும். அந்த வகையில், தற்போது காஞ்சிபுரம் அத்திவரதருக்கும் அதிக அளவில் காணிக்கை கிடைக்க தொடங்கி இருக்கிறது. 

முதல் 23 நாளில் மட்டும் ரூ.1 கோடியே 38 லட்சத்து 16 ஆயிரத்து 319 காணிக்கையாக கிடைத்துள்ளது.

மொத்தம் 48 நாட்கள் என்பதால், ஏனைய நாட்களிலும் உண்டியல் வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ரூ.2½ கோடியை உண்டியல் வசூல் தாண்டும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், தங்கம், வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story