குருவாயூரில் கிருஷ்ண ஜெயந்தி


குருவாயூரில் கிருஷ்ண ஜெயந்தி
x
தினத்தந்தி 20 Aug 2019 10:29 AM GMT (Updated: 20 Aug 2019 10:29 AM GMT)

கிருஷ்ண ஜெயந்தி, தென் மாநிலங்களில் ஸ்ரீஜெயந்தி, ஜென் மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

கிருஷ்ணரின் செயல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளர்த்தமும், வாழ்க்கை உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. இதை உணர்ந்தால், வாழ்க்கையில் வெற்றிநடைப் பயிலலாம். அமைதியுடனும், மனித நேயத்துடனும் வாழ முடியும். ஆனந்தம் என்பது பொருளிலோ, புகழிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை அகத்தில் இருந்து தேடாமல் புறத்தில் இருந்து தேடுகிறோம்.

கிருஷ்ணரின் ஆனந்தம், அகத்தில் இருந்து வந்தது. அது புறத்தில் வெளிப்பட்டது. அக வாழ்க்கை இனித்தால், புற வாழ்க்கை இனிக்கும். கேரளாவில் குருவாயூர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. அன்று குருவாயூர் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய் கிறார்கள். சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் பூண்டு கிருஷ்ண ெஜயந்தி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இத்திருநாளில் விரதம் இருந்து மனமுருகி கிருஷ்ணரை வேண்டுவோர் அனைத்து நற்பலன்களையும் பெறுவர் என்பது திண்ணம்.

Next Story