இந்த வார விசேஷங்கள் 23-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி


இந்த வார விசேஷங்கள் 23-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி
x
தினத்தந்தி 20 Aug 2019 10:58 AM GMT (Updated: 20 Aug 2019 10:58 AM GMT)

23-ந் தேதி (வெள்ளி) கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி).

20-8-2019 முதல் 26-8-2019 வரை

20-ந் தேதி (செவ்வாய்)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.

சமநோக்கு நாள்.

21-ந் தேதி (புதன்)

திருச்செந்தூர், பெருவயல் ஆகிய தலங்களில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

22-ந் தேதி (வியாழன்)

திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு.

திருப்போரூர் முருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம்.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (வெள்ளி)

கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி).

கார்த்திகை விரதம்.

திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்கரதக் காட்சி.

கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (சனி)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குடவருவாயில் ஆராதனை.

வரகூர் உறியடி உற்சவம்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், இரவு சுவாமி- அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதி உலா.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

26-ந் தேதி (திங்கள்)

சர்வ ஏகாதசி.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச்சப்பரம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதி உலா.

மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதார காட்சி.

மேல்நோக்கு நாள்.

Next Story