இந்த வார விசேஷங்கள் - 24-9-2019 முதல் 30-9-2019 வரை


இந்த வார விசேஷங்கள் - 24-9-2019 முதல் 30-9-2019 வரை
x
தினத்தந்தி 24 Sep 2019 11:19 AM GMT (Updated: 24 Sep 2019 11:19 AM GMT)

29-ந் தேதி (ஞாயிறு), நவராத்திரி ஆரம்பம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம், சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.

24-ந் தேதி (செவ்வாய்)

 சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

 திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.

 மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்)

 சர்வ ஏகாதசி.

 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

 திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.

 கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்)

 பிரதோஷம்.

 சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

 சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

 கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி)

 மகாளய கேதார விரதம்.

 மாத சிவராத்திரி.

 திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

 ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

 கீழ்நோக்கு நாள்.

28-ந் தேதி (சனி)

 மகாளய அமாவாசை.

 கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

 திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.

 மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு)

 நவராத்திரி ஆரம்பம்.

 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.

 சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.

 மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.

 திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, கழுகுமலை முருகன், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், மைசூர் சாமுண்டீஸ்வரி ஆகிய தலங்களில் நவராத்திரி ஆரம்பம்.

 குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.

 சமநோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்)

 திருப்பதி ஏழுமலையான், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், நாட்டரசன்கோட்டை எம்பெருமாள், குணசீலம் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

 குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார தரிசனம்.

 சமநோக்கு நாள்.

Next Story