ஆன்மிகம்

கிரகங்களின் பார்வை பலம் + "||" + strength of the planets' vision

கிரகங்களின் பார்வை பலம்

கிரகங்களின் பார்வை பலம்
கண் திருஷ்டியின் மூலம் பலரும் பாதிப்புக்கு ஆளாவதை நீங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கலாம். அதனால்தான் ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று கூறி வைத்தார்கள்.
கண் பார்வையில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் சிலருடைய வாழ்க்கையே மாற்றமடைந்து விடுகின்றன. மனிதர்களின் பார்வைக்கு மகத்துவம் உள்ளது போல், கிரகங்களின் பார்வைக்கும் அதிக பலன் உண்டு. அது நல்ல பலன்களாகவும் இருக்கலாம். கெடு பலன்களாகவும் இருக்கலாம். அது அவரவர்களின் கர்ம வினைப் பயனைப் பொறுத்தது. அந்த கிரகங்களின் பார்வையின் கடுமையைக் குறைப்பதற்காகத்தான் நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம்.

நவக்கிரகங்களும் ஒன்றையொன்று பார்க்கும் பொழுது பலன் கிடைக்கிறது. “குரு பார்க்கக் கோடி நன்மை” என்பார்கள். அதன்படி வியாழன் கூடினால் விவாகம் கைகூடும். எல்லாக் கிரகங்களும் தன் காரகத்துவத்திற்கு ஏற்ற பார்வை பலன்களை வழங்குகின்றன. எல்லா கிரகங்களுக்கும், அது இருக்கும் இடத்தில் இருந்து 7-ம் பார்வை என்பது பொதுவானவை. ஒருசில கிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில இடங் களிலும் பார்வை பதியும். கிரகங்களின் பார்வை பதியும் இடங்களைப் பார்க்கலாம்.

சூரியன் 7-ம் வீட்டைப் பார்ப்பார்

சந்திரன் 7-ம் வீட்டைப் பார்ப்பார்

புதன் 7-ம் வீட்டைப் பார்ப்பார்

சுக்ரன் 7-ம் வீட்டைப் பார்ப்பார்

செவ்வாய் 4,7,8 ஆகிய வீட்டைப் பார்ப்பார்

குரு 5,7,9 ஆகிய வீட்டைப் பார்ப்பார்

சனி 3,7,10 ஆகிய வீட்டைப் பார்ப்பார்

ராகு, கேதுக்கள் 3,7,11 ஆகிய வீடுகளைப் பார்ப்பார்கள்.

இரண்டு பகை கிரகங்கள் பார்த்துக் கொண்டால், பாதகம் ஏற்படும். நட்பு கிரகங்கள் இரண்டு ஒன்றையொன்று பார்த்துக் கொண்டால் சாதகமான பலன்கள் அமையும்.