மருந்து நைவேத்தியம்


மருந்து நைவேத்தியம்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:45 PM GMT (Updated: 3 Feb 2020 9:25 AM GMT)

கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த நஞ்சன்கூடு என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு, சர்க்கரை, சுக்கு, வெண்ணெய் ஆகியவற்றை கலந்து நைவேத்தியம் செய்து படைக்கிறாா்கள்.

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தை, சிவபெருமான் உண்டார். இதனால் அவருக்கு ‘நஞ்சுண்டார்’ என்று பெயர் வந்தது. 

அவர் உண்ட நஞ்சு ஜீரணிப்பதற்காக, இப்படி நைவேத்தியம் செய்யப்படுவதாக, அந்தக் கோவில் தல வரலாறு சொல்கிறது.

Next Story