4-ந் தேதி (செவ்வாய்) மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தந்தப் பல்லக்கில் பவனி, மாலை சுவாமி தங்கக் குதிரையிலும், அம்பாள் தங்கப் பல்லக்கிலும் வலைவீசியருளல்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெப்ப உற்சவம், இரவு தங்கத் தேரில் சூரசம்ஹார லீலை.
திருச்சேறை சாரநாதர், ராம அவதார காட்சி, இரவு அனுமன் வாகனத்தில் வீதி உலா.
கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (புதன்)
முகூர்த்த நாள்.
சர்வ ஏகாதசி.
ஆழ்வாா்திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.
திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் ராஜ அலங்காரம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை எடுப்புத் தேரில் உலா, இரவு சப்தாவரணம்.