நாகாபரண முருகன்


நாகாபரண முருகன்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:16 AM GMT (Updated: 18 Feb 2020 11:16 AM GMT)

சேலம் மாவட்டம் கபிலர் மலை கருவறை, குடவரையாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முருகப்பெருமான், பாலமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவருக்கு வலது புறத்தில் சுயம்பு உருவம் இருப்பதைக் காணலாம். உற்சவர் நாகாபரணத்துடன் காட்சி தருவார்.

சுயம்பு முருகன்

திருப்போரூர் கருவறையில் பனை மரத்தடியில் புற்றிடம்கொண்ட சுயம்புவாக முருகப்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது. பின்னர் கவசம் அணிந்து அலங்காரம் செய்கிறார்கள். அபிஷேகத்திற்காக தனியே ஒரு முருகனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

விஸ்வரூப முருகன்

குமரி மாவட்டம் வேளிமலையில் விஸ்வரூப முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இந்த கந்தன் 8 அடி 8 அங்குல உயரத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். அதே போல் வள்ளி அம்மையின் திருவுருவம் 6 அடி 2 அங்குலம் கொண்டது. முருகப்பெருமான், வயதான தோற்றத்திலும், வேடனாகவும் வந்து வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்ட தலமாக இது சொல்லப் படுகிறது. வள்ளியுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கும் அபூர்வ தலம் இதுவாகும்.

முருகன் சன்னிதியில் சிவன்

திருமுருகன்பூண்டியில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் ஆறு முகமும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு தென்திசை நோக்கி அருள் பாலிக்கிறார். முருகப்பெருமான் சன்னிதியில், சிவபெருமான் லிங்க வடிவத்தில் இருக்கிறார்.


Next Story