ஆன்மிகம்

பரந்தாமன் அருள்தரும் சொர்க்கவாசல் + "||" + Barandaman will bless Sorkkavashal

பரந்தாமன் அருள்தரும் சொர்க்கவாசல்

பரந்தாமன் அருள்தரும் சொர்க்கவாசல்
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வந்தாலும், மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் அந்தக் கதவை அன்று மட்டும் திறந்து வைப்பர். அதில் நுழைந்து வந்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள், கடல் அலையைப் போல சொர்க்கவாசலில் நுழையக் காத்திருப்பர். அருகிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலில் நாம் அவசியம் நுழைந்து சென்று வழிபட்டு வரவேண்டும். அதன் மூலம் சிக்கல்களும், சிரமங் களும் தீர்ந்து சிறப்பான வாழ்வமையும். ரொக்கமும் சேரும். சொர்க்கமும் கிடைக்கும்.

அந்த விஷ்ணு பகவான் நமக்கு பக்கபலமாக விளங்க 25.12.2020 அன்று வைகுண்ட ஏகாதசி வருகின்றது. மறுநாள் துவாதசியன்று அன்னம் வைத்து உண்டு முறைப்படி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.