தை அமாவாசையும், தை வெள்ளியும்


தை அமாவாசையும், தை வெள்ளியும்
x
தினத்தந்தி 14 Jan 2021 4:00 AM IST (Updated: 14 Jan 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையானது வருகிற 11.2.2021 (வியாழக்கிழமை) அன்று வருகின்றது.

தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்று சொல்வது வழக்கம். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்றுவதன் மூலம், அவள் உள்ளம் குளிச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள்.
1 More update

Next Story