ஆன்மிகம்

மரண பயம் நீங்க.. + "||" + Get rid of the fear of death

மரண பயம் நீங்க..

மரண பயம் நீங்க..
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள், தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோவிலாக, திருநீலக்குடி திருத்தலம் திகழ்கிறது.
 கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு திருநீலகண்டநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இறைவன்- திருநீலகண்டநாதர், இறைவி- ஒப்பிலாமுலையாள். இத்தல மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும் அதிசயம் நிகழ்கிறது. ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத்தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.