விருத்தகிரீஸ்வரர் கோவில் சிறப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது, விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்.
இந்த திருத்தலத்தின் புராணப் பெயர் ‘திருமுதுகுன்றம்’ என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். இந்தக் கோவிலில் எல்லாமே ஐந்தாக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அது பற்றி பார்ப்போம்.
மூர்த்தங்கள்
* விநாயகர்
* முருகர்
* சிவபெருமான்
* சக்தி (அம்மன்)
* சண்டிகேஸ்வரர்
இறைவனின் திருநாமம்
* விருத்தகிரீஸ்வரர்
* பழமலைநாதர்
* விருத்தாசலேஸ்வரர்
* முதுகுன்றீஸ்வரர்
* விருத்தகிரி
கோபுரங்கள்
* கிழக்கு கோபுரம்
* வடக்கு கோபுரம்
* மேற்கு கோபுரம்
* தெற்கு கோபுரம்
* கண்டராதித்தன் கோபுரம்
நந்தி
* இந்திர நந்தி
* வேத நந்தி
* ஆத்ம நந்தி
* மால்விடை நந்தி
* தர்ம நந்தி
விநாயகர்
* ஆழத்துப் பிள்ளையார்
* மாற்றுரைத்த விநாயகர்
* முப்பிள்ளையார்
* தசபுஜ கணபதி
* வல்லப கணபதி
ஈசனை வழிபட்டோர்
* உரோமச முனிவர்
* விபசித்து முனிவர்
* குமார தேவர்
* நாதசர்மா
* அனவர்த்தினி
வழிபாடு
* திருவனந்தல்
* காலசந்தி
* உச்சிகாலம்
* சாயரட்சை
* அர்த்தஜாமம்
திருச்சுற்று
* தேரோடும் திருச்சுற்று
* கயிலாய திருச்சுற்று
* வன்னியடி திருச்சுற்று
* அறுபத்து மூவர் திருச்சுற்று
* பஞ்சவர்ண திருச்சுற்று
மண்டபங்கள்
* இருபது கால் மண்டபம்
* இடைகழி மண்டபம்
* தபன மண்டபம்
* மகா மண்டபம்
* இசை மண்டபம்
Related Tags :
Next Story