ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பது ஏன்?


ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பது ஏன்?
x
தினத்தந்தி 12 July 2021 6:21 PM GMT (Updated: 12 July 2021 6:21 PM GMT)

பெற்றோர்களுக்கு, தங்களின் பிள்ளைகளைப் பற்றிய கவலை வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.

ஆரம்பத்தில் அவர்களின் படிப்பிற்காக கவலைப்படுகிறார்கள். அதன்பிறகு வேலை கிடைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று கவலைப்படுகிறார்கள். திருமண வயதை நெருங்கிவிட்டால் கல்யாணம் ஆகவேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டுமென்று கவலைப்படுகிறார்கள்.

இப்படி பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தபிறகு வரும் முதல் ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பார்கள். பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். காரணம் ஆடியில் தாம்பத்ய வாழ்க்கை கூடாது என்றும், தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்றும் கருதுகிறார்கள்.

சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாதென்று சொல்வது வழக்கம். அங்காரகனுக்கும், ஆதவனுக்கும் தந்தைக்குரிய யோகபலம் பெற்ற நாளில் முறையாகப் பரிகாரங்களைச் செய்தால். பெற்றோர்களுக்கு தோஷங்கள் விலகி யோகங்கள் ஏற்படும். பிள்ளைகளும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார்கள்.

அறிவியல் ரீதியாக சித்திரையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், பிறந்த குழந்தைகளை அது பாதிக்கலாம் என்பதால் இந்த வழக்கத்தை கொண்டுவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Next Story