18 மலை தேவதைகள்
சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு அருளும் மூலவரான ஐயப்பனை தரிசிக்க 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
விரதம் இருந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டுமே இந்த படிகளின் வழியாக மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் வேறு பாதையில்தான் செல்ல வேண்டும்.
சபரிமலை ஐயப்பனைப் போன்று, இந்த 18 படிகளுமே சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த படிகளுக்கு என்று தனியாக ‘படி பூஜை’யும் நடத்தப்படுவது வழக்கம். இந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக தல வரலாறு சொல்கிறது. மேலும் இந்த படிகள் 18-ம், சபரிமலை மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள 18 மலைகளில் வாழும் மலை தேவதைகளை குறிக்கின்றனவாம்.
இங்கு நடத்தப்படும் படி பூஜையானது, இந்த மலை தேவதைகளை நினைத்து வழிபடுவதாகவே செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். அந்த 18 மலைகளின் பெயர்களையும் இங்கே பார்ப்போாம்.
* தலைப்பாறை மலை
* காளகெட்டி மலை
* புதுச்சேரி மலை
* கரிமலை
* இஞ்சிப்பாறை மலை
* நிலக்கல்
* தேவர்மலை
* ஸ்ரீபாத மலை
* வட்ட மலை
* சுந்தர மலை
* நாகமலை
* நீலிமலை
* சபரிமலை
* மயிலாடும் மலை
* மதங்க மலை
* சிற்றம்பல மலை
* கவுண்டன் மலை
* பொன்னம்பல மேடு (காந்தமலை)
Related Tags :
Next Story