ஆன்மிகம்

கண்ணனின் நாமங்கள் + "||" + Names of Kannan

கண்ணனின் நாமங்கள்

கண்ணனின் நாமங்கள்
கண்ணனின் பெயர்கள் மற்றும் சிறப்புப் பெயர்களின் பட்டியல் இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரின் பல்வேறு சிறப்புப் பெயர்களையும், பட்டப் பெயர்களையும், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் போன்ற புராணங்களிலும் மற்றும் மகாபாரத இதிகாசத்திலும் பல்வேறு இடங்களில் குறிக்கிறது.
* ஹரி - இயற்கையின் அதிபதி

* கேசவன் - அளவிட முடியாதவன்

* ஸ்ரீதரன் - லட்சுமியை மார்பில் கொண்டவன்

* வாசுதேவன் - உயிர்கள் அனைத்திலும் வசிப்பவன்

* விஷ்ணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்

* மாதவன் - பெரும் தவம் செய்பவன்

* மதுசூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவன்

* புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன்

* ஜனார்த்தனன் - தீயவர்களின் இதயத்தில் அச்சத்தை விளைவிப்பவன்

* சாத்வதன் - சாத்வ குணத்தை விட்டு விலகாதவன்

* விருபாட்சணன் - வேதங்கள், அவனைக் காண்பதற்கான கண்கள்

என்பதால் இப்பெயர் வந்தது.

* நாராயணன் - மனிதர்களின் புகலிடமாக இருப்பவன்

* புருசோத்தமன் - ஆண்களில் மேன்மையானவன்

* அனந்தன் - அழிவில்லாதவன்

* கோவிந்தன் - பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்

* பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

* அச்சுதன் - எந்த ஒரு காரியத்திலும் இருந்து நழுவ நினைக்காதவர்