விநாயகர் சிலையை நீரில் கரைப்பது ஏன்?


விநாயகர் சிலையை நீரில் கரைப்பது ஏன்?
x
தினத்தந்தி 6 Sep 2021 4:56 PM GMT (Updated: 6 Sep 2021 4:56 PM GMT)

விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் வழக்கம் வந்தது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம்.

ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.

மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு, களிமண்ணை கரைத்தால், அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தரும் என்று முன்னோர்கள் கணித்தனர். அதனால்தான் விநாயகர் சிலை வைத்து, அதை கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணை கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால்தான், அதை மூன்று நாட்கள் வைத்து அது இறுகிப்போனதும் அதைக் கொண்டு போய் ஆறுகளில் கரைத்துள்ளனர்.

Next Story