ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம் + "||" + The week is a nightmare

வாரம் ஒரு திருமந்திரம்

வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு ஒரு பாடல் என்ற ரீதியில்தான் அவர் பாடல்களை எழுதியதாக புராணங்கள் சொல்கின்றன. அதன் காரணமாகத்தான் அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு அறிவுரையை வழங்கும் விதத்தில் இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க திருமந்திரப் பாடல்களை வாரம் தோறும் பார்த்து வருகிறோம். இன்றும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..


பாடல்:-

தருவழி ஆகிய தத்துவ ஞானம்

குருவழி யாகும் குணங்களுள் நின்று

கருவழி யாகும் கணக்கை அறுத்துப்

பெருவழி யாக்கும் பேரொளி தானே.

விளக்கம்:- இந்த உலகத்தில் இருந்தும், உலக மாயையில் இருந்தும் விடுதலை பெற்று, வீடுபேறு என்னும் முக்தியை அடைவதற்கான சிவஞானம் கிடைப்பதற்கு, நாம் ஒவ்வொருவருக்கும் குருவின் அருள் தேவை. அந்த குருவருள் கிடைத்ததும், அந்த உயிர்களிடத்தில் சிவபெருமானின் எட்டு குணங்களும் தோன்றும். அதன் பயனாக, நம்மை தொடர்ந்து வரும் பிறவிக் கணக்கு முடியும். ஈசனின் பெருநெறியில் செல்வதற்குரிய அருள்பேரொளி கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் என்னும் அற்புத நூலை, பொருள்புரிந்து தெளிந்தால், வாழ்வில் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
2. வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் பாடி அருளிய திருமந்திரம், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.