ஆனந்தம் தரும் அனந்தசயனம்


ஆனந்தம் தரும் அனந்தசயனம்
x
தினத்தந்தி 5 Oct 2021 6:25 AM GMT (Updated: 5 Oct 2021 6:25 AM GMT)

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான் இந்த ஆலயத்தை முதன் முதலாக எழுப்பி, பூஜை செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக அறியமுடிகிறது. அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த தொகுப்பை காண்போம்.

3 வாசல் தரிசனம் 


மூலவரான பத்மநாப சுவாமி, மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தன் என்னும் பாம்புப் படுக்கையில் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். 18 அடி நீளம் கொண்ட மூலவர் சிலையை 12 ஆயிரம் சாளக்கிராம கற்களைக் கொண்டும், ‘கடுசர்க்கரா’ என்னும் அஷ்டபந்தன கலவையாலும் உருவாக்கியுள்ளனர். இந்த பிரம்மாண்ட சிலையை கோவிலின் மூன்று வெவ்வேறு வாசல்கள் வழியே மூன்று பிரிந்த கோலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். அந்த தரிசனக்காட்சி இதோ...

மூலவர் வரலாறு


1686 -ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் இலந்தை மரத்தால் ஆன மூலவர் சிலை தீக்கிரையானது.

1729 -ல் மார்த்தாண்ட வர்ம மன்னனின் முயற்சியால், இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1750-ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மன், பத்மநாபசுவாமிக்கு தனது அரசையும், செல்வத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்ததுடன், தனது உடைவாளையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்தார்.

6 பாதாள ரகசிய அறைகள்


ஆலயத்தில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இந்த அறைகள், நீதிமன்ற உத்தரவால் 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில் விலை மதிப்பற்ற வைர, வைடூரிய, தங்க நகைகள் என பல பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

சிறப்பு

கோவில் கர்ப்பக்கிரகம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடுகிறார்கள்.

100 அடி உயரத்துடன் ஏழு கலசங்கள் அடங்கிய கோவில் கோபுரம் பிரசித்திப் பெற்றது.

Next Story