நவராத்திரியும்.. வழிபாடும்..
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் ‘நவராத்திரி’ தினங்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது தினங்களிலும், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடு செய்ய வேண்டும்.
ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவார். அதே போல் தினமும் ஒரு நைவேத்தியம், பழம் படைக்கப்படும். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியதை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
அம்மன் வழிபாடு
முதல் நாள் - மகேஸ்வரி
இரண்டாம் நாள் - கவுமாரி
மூன்றாம் நாள் - வராகி
நான்காம் நாள் - மகாலட்சுமி
ஐந்தாம் நாள் - வைஷ்ணவி
ஆறாம் நாள் - இந்திராணி
ஏழாம் நாள் - சரஸ்வதி
எட்டாம் நாள் - நரசிம்மி
ஒன்பதாம் நாள் - சாமுண்டி
மலர்கள்
முதல் நாள் - மல்லிகை
இரண்டாம் நாள் - முல்லை
மூன்றாம் நாள் - சம்பங்கி
நான்காம் நாள் - ஜாதிமல்லி
ஐந்தாம் நாள் - பாரிஜாதம்
ஆறாம் நாள் - செம்பருத்தி
ஏழாம் நாள் - விபூதி பச்சிலை
எட்டாம் நாள் - மருதாணிப்பூ
ஒன்பதாம் நாள் - தாமரை
பழங்கள்
முதல் நாள் - வாழைப்பழம்
இரண்டாம் நாள் - மாம்பழம்
மூன்றாம் நாள் - பலாப்பழம்
நான்காம் நாள் - கொய்யாப்பழம்
ஐந்தாம் நாள் - மாதுளைப்பழம்
ஆறாம் நாள் - ஆரஞ்சுப் பழம்
ஏழாம் நாள் - பேரிச்சம் பழம்
எட்டாம் நாள் - திராட்சைப் பழம்
ஒன்பதாம் நாள் - நாவல் பழம்
நைவேத்தியங்கள்
முதல் நாள் - வெண்பொங்கல்
இரண்டாம் நாள் - புளியோதரை
மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் - காய்கறி சாதம்
ஐந்தாம் நாள் - தயிர் சாதம்
ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்
எட்டாம் நாள் - பால் சாதம்
ஒன்பதாம் நாள் - சுண்டல்,
சர்க்கரைப்பொங்கல்
கோலங்கள்
முதல் நாள் - அரிசி மாவு
இரண்டாம் நாள் - கோதுமை மாவு
மூன்றாம் நாள் - மலர்
நான்காம் நாள் - அட்சதை
ஐந்தாம் நாள் - கடலை
ஆறாம் நாள் - பருப்பு
ஏழாம் நாள் - வெள்ளை மலர்
எட்டாம் நாள் - தாமரை
ஒன்பதாம் நாள் - வாசனை பொடி கலந்து
Related Tags :
Next Story