வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 5 Nov 2021 9:50 AM GMT (Updated: 5 Nov 2021 9:50 AM GMT)

திருமந்திரத்தின் பாடல்களை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.

தமிழில் பாடப்பட்ட சைவ சமயப் படைப்புகளில், முன்னிலை வகுப்பது, திருமந்திரம். திருமூலர் என்னும் ஞானியால் படைக்கப்பட்ட மெய்யியல் நூலாக இது விளங்குகிறது. ‘அன்பே சிவம்’, சிவமே அன்பு’ என்று, இறைவனே அன்பின் வடிவமானவன் என்று போதிக்கும் நூல் என்பதால், சைவ சிந்தாத்தங்களில் இது முதன்மை பெற்றுத் திகழ்கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

பாடல்:-

கழலார் கமலத் திருவடி என்னும்

நிழல் சேரப்பெற்றேன் நெடுமால் அறியா

அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்

குழல் சேரும் இன்னுயிர்க் கூடும் குலைத்ததே.

விளக்கம்:-

இறைவனின் தாமரைத் திருவடி நிழலில் சேர்ந்தேன். அதன் காரணமாக, திருமாலால் அறிய முடியாதபடிக்கு நெருப்பு வடிவமாக உயர்ந்து நின்ற அந்தச் சிவபெருமான், தன்னுடைய உடலில் பாதியைக் கொண்டிருக்கும் அம்பாளோடு சேர்ந்து வந்து, எனக்கு அருள் செய்தான். எனவே இனி இந்த உடம்பு, பிறவி எடுக்கும் நிலையில் இருந்து நீங்கிவிட்டது.

Next Story