ஆன்மிகம்

தென் மாவட்ட சிவாலயங்கள் + "||" + Southern District Shiva Temples

தென் மாவட்ட சிவாலயங்கள்

தென் மாவட்ட சிவாலயங்கள்
திருநெல்வேலி என்றாலே, அந்த ஊரின் மையமாக அமைந்திருக்கு நெல்லையப்பர் கோவில்தான் நினைவுக்கு வரும். அது தவிர்த்தும் திருநெல்வேலியில் ஏராளமான சிவாலயங்கள் இருக்கின்றன. தூத்துக்குடி, தென்காசி, ஆகிய மாவட்டங்கள் பிரிந்த பிறகு, சில ஆலயங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றை ஒரு தொகுப்பாக இங்கே பார்க்கலாம்.
சபைகள்

நடனத்திற்கு அதிபதியான நடராஜப் பெருமானின் நடன ஆலயங்களாக ஐந்து தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் இரண்டு தலங்கள், திருநெல்வேலி, தென்காசியில் அமைந்துள்ளன.

* சித்ர சபை - திருக்குற்றாலம்
* தாமிர சபை- திருநெல்வேலி முப்பீட தலங்கள்
* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோவில்
* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோவில்
* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோவில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

ராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்

* களக்காடு - சத்யவாகீசர் கோவில்
* கீழபத்தை - குலசேகரநாதர் கோவில்
* பதுமனேரி - நெல்லையப்பர் கோவில்
* தேவநல்லூர் - சோமநாதர் கோவில்
* சிங்கிகுளம் - கயிலாசநாதர் கோவில் 

பஞ்ச பீட தலங்கள்

* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி

பஞ்ச பூத தலங்கள் (தென்நாடு)

* சங்கரன்கோவில் - மண் தலம்
* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
* தாருகாபுரம் - நீர் தலம்
* தென்மலை - காற்று தலம்
* தேவதானம் - ஆகாய தலம்

சிவ கயிலாயங்கள்

* பிரம்மதேசம் - கயிலாசநாதர் திருக்கோவில்
* அரியநாயகிபுரம் - கயிலாசநாதர் திருக்கோவில்
* திருநெல்வேலி - நெல்லையப்பர் (தென்கயிலாயநாதர்) திருக்கோவில்
* கீழநத்தம் (மேலூர்) - கயிலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கயிலாசநாதர் திருக்கோவில்
* தென்திருப்பேரை - கயிலாசநாதர் திருக்கோவில்
* சேர்ந்தபூமங்கலம் - கயிலாசநாதர் திருக்கோவில்
* கங்கைகொண்டான் - கயிலாசநாதர் திருக்கோவில்

பஞ்ச ஆசன தலங்கள்

* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோவில்
* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோவில்
* நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோவில்
* விஜயநாராயணம் - மனோன்மணீசர் திருக்கோவில்
* செண்பகராமநல்லூர் - ராமலிங்கர் திருக்கோவில்

நவக்கிரக கோவில்கள்

* பாபநாசம் - சூரியன்
* சேரன்மகாதேவி - சந்திரன்
* கோடகநல்லூர் - செவ்வாய்
* குன்னத்தூர் - ராகு
* முறப்பநாடு - குரு
* ஸ்ரீவைகுண்டம்- சனி
* தென்திருப்பேரை- புதன்
* ராஜபதி - கேது
* சேர்ந்தபூமங்கலம்- சுக்ரன்

பஞ்ச குரோச தலங்கள்

* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோவில்
* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோவில்
* கடையம் - வில்வவனநாதர் திருக்கோவில்
* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோவில்
* பாபநாசம் - பாபநாசர் திருக்கோவில்

தச வீரட்டானத் தலங்கள்

* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோவில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோவில்- மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோவில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கயிலாசநாதர் திருக்கோவில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோவில் - சரண தலம்
* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோவில் - சகாய தலம்
* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோவில் - பிரசாதி தலம்
* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோவில் - கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில் - சம்பத் தலம்
* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோவில்