வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 1 Jan 2022 6:51 AM GMT (Updated: 1 Jan 2022 6:51 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலர் என்னும் மகா ஞானியால் உருவான திருமந்திர நூல், ஒப்பற்ற சைவ நெறி நூலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திருமந்திர பாடல் ஒவ்வொன்றும், சிவனின் அன்பையும், அவருடைய இருப்பையும், அவரால் கிடைக்கும் பேரின்பத்தையும் பற்றி எடுத்துரைக்கின்றன. அந்த சிறப்புக்குரிய திருமந்திரப் பாடல்களை வாரம் ஒன்றாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு திருமந்திரப் பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்

நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள்

உச்சிக்கும் கீழது உண்ணாக்கு மேலது

வைச்ச பதமிது வாய்திறவாதே..

விளக்கம்:-

பச்சிம திக்கு எனப்படும் மேற்கு திசை நோக்கி தன்னுடைய மாணவனை அமரச் செய்யும் குருவானவர், அந்த திசையில் இருந்தபடியே நாள்தோறும் சிவனை நினைத்து வரும்படி உத்தரவிடுவதோடு, ஈசனை வழிபடுவதற்கான மந்திரத்தையும் உபதேசம் செய்துவைப்பார்.

அந்த சிவன் இருக்கும் இடமானது, நம்முடைய வாய் உச்சரிக்கும் ஈசனின் திருநாமத்தில்தான்.

சிவனை விட்ட நீங்காத நிலை பெற்ற பின்பு, ஒருவருக்கு மீண்டும் பிறப்பு உண்டாகாது.

Next Story