வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 7 Jan 2022 7:17 AM GMT (Updated: 7 Jan 2022 7:17 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமந்திரம் என்னும் மாபெரும் சைவ சித்தாந்த நூலை வடித்தவர், திருமூலர். அன்பின் வடிவமாக சிவபெருமான் இருக்கிறார் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துரைத்த திருமூலர், அந்த ஈசனை கைப்பற்றிச் சென்றால், முக்தியை அடையலாம். மீண்டும் பிறக்கும் நிலை வராது என்பதையும் சொல்கிறார். சிறப்புமிக்க திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து

நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்

தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்

பேயென்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

விளக்கம்:-

வாய் ஒன்றைச் சொல்லும் வகையிலும், மனம் வேறு சிந்திக்கும் வகையிலும், அதற்கு நேர்மாறாக செயல்படும் விதத்திலும் வாழ்வது என்பது தகுந்ததல்ல. சொல், சிந்தனை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றியிருக்கும் நிலைதான் உறுதியான வெற்றியைப் பெற்றுத் தரும். பெருமானே.. நீ தீயின் வடிவம் என்பதை நான் தெரிந்து தெளிவு பெற்றுவிட்டேன். அதில் உறுதியில்லாதவர்கள் அனைவரும், என்னை பேய் பிடித்து அலைபவன் என்கிறார்கள்.

Next Story