தந்தத்தில் சரஸ்வதி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதிதேவியின் சிலை யானையின் தந்தத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது, இந்த சரஸ்வதிதேவியின் சிலை. மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளோடு அமைந்த இந்த சிலையானது, யானையின் தந்தத்தில் உருவாக்கப்பட்டதாகும். சரஸ்வதியை, கல்விக்கு அதிபதியாகவும், பிரம்மனின் துணையாகவும் புராணங்கள் கூறினாலும், இந்திய தேசத்தில் சரஸ்வதி என்ற நதி இருந்ததாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.
இந்த சிலையில் சரஸ்வதிதேவியை ஒரு நதி என்பதைப் போல உருவகப்படுத்தியே செதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாகத்தான், சரஸ்வதிதேவியின் இடது கரம், புனித நீர் கொண்ட பானையை ஏந்தியிருக்கிறது.
Related Tags :
Next Story






