ஞானம் வழங்கும் தலம்

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தலைஞாயிறு என்ற ஊர். இங்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்திரன், தான் செய்த குற்றம் ஒன்றை பொறுத்தருள வேண்டும் என்று, இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றான். இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்ற பெயர் வந்தது.
சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படுபவர், வசிஷ்டர். அவர் ஒரு முறை ஞானம் பெறுவதற்காக, பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரை சந்தித்த பிரம்மன், “தர்மம் ஒன்று செய்தால், அதன் பலன் பத்து மடங்காக கிடைக்கும் ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு சென்று சிவபூஜை செய்தால், ஞானம் பெறலாம்” என்று, இத்தல பெருமையைக் கூறி அனுப்பினார். வசிஷ்டரும் இந்த திருத்தலம் உள்ள பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்டதன் மூலம் ஞானம் பெற்றார்.
Related Tags :
Next Story






