சேலத்தில், மகா சிவராத்திரியையொட்டி 1½ லட்சம் ருத்திராட்சத்தால் 13 அடி சிவலிங்கம்-பக்தர்கள் சாமி தரிசனம்

சேலத்தில், மகா சிவராத்திரியையொட்டி 1½ லட்சம் ருத்திராட்சத்தால் 13 அடி சிவலிங்கம்-பக்தர்கள் சாமி தரிசனம்
x

சேலத்தில், மகா சிவராத்திரியையொட்டி 1½ லட்சம் ருத்திராட்சத்தால் 13 அடி சிவலிங்கம்-பக்தர்கள் சாமி தரிசனம்

சேலம்

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழாவையொட்டி, 13 அடியில் ருத்ரேஸ்வரர் என்று லிங்கம் அமைத்து அதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 8 ருத்திராட்சத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த சிவலிங்கம் அமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து நேற்று காலை அந்த லிங்கத்திற்கு சிவாச்சாரியர்கள் லட்சார்ச்சனை செய்தனர். இதைத்தொடர்ந்து மகா சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் பொன்னம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ருத்திராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள், வாசவி கிளப் மற்றும் ஸ்மார்ட் பாய்ஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story