வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு ஒப்பாக வைத்து போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

முன்னைப் பிறவியிற் செய்த முதுதவம்

பின்னைப் பிறவியிற் பெற்றால் அறியலாம்

தன்னை அறிவது அறிவாம் அஃதன்றிப்

பின்னை அறிவது பேயறிவு ஆகுமே.

விளக்கம்:-

முற்பிறவியில் ஒருவர் செய்த சிறந்த தவத்தின் பயனை, இந்தப் பிறவியில் அவர் பெற்றுள்ள இன்ப துன்பங்களைக் கொண்டு அறிய முடியும். ஒருவர் தன்னையும், தனக்குள் இருக்கும் சிவத்தையும் உணர்வதே மெய்ஞானம். அதனை விட்டு, மற்றவற்றை அறியும் அறிவு, நிலையற்ற அறிவாகும்.


Next Story