இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 21 Feb 2024 5:24 AM GMT (Updated: 21 Feb 2024 5:29 AM GMT)

ஆழ்வார்திருநகரியில் இன்று ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. காங்கேயம் முருகப் பெருமான் தேரோட்டம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 9 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவாதசி நண்பகல் 1.58 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 4.37 மணி வரை பிறகு பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. காங்கேயம் முருகப் பெருமான் தேரோட்டம். திருத்தணி முருகப்பெருமான் வெள்ளித் தேரில் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம். கோவை கோணியம்மன் புலி வாகனத்தில் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவிடைமருதூர் பிருகத்குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

ராசிபலன்

மேஷம்- வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மற்றவர்களை அனுசரித்து செல்வதில் மகிழ்ச்சி கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்-ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடும்.

மிதுனம்- எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். நேற்றைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு செய்வர். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கடகம்-முயற்சியில் வெற்றி பெறும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

சிம்மம்- இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். வரவு திருப்தி தரும்.

கன்னி-புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

துலாம்- பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சினைகள் குறையும். மாற்றுக்கருத்துடையார் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

விருச்சிகம்- மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

தனுசு- அமைதி குறையும் நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மகரம்- இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

கும்பம்- தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்-சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். வருமானம் உயரும்.


Next Story