இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-26 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அமாவாசை மாலை 6.35 மணி வரை பிறகு பிரதமை.

நட்சத்திரம்: பூராடம் இரவு 6.52 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சர்வ அமாவாசை. ஸ்ரீஅனுமன் ஜெயந்தி. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் பவனி, இரவு பட்டாபிஷேகம். பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்: வருமானம் உயரும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்: ஆதாயத்தைக் காட்டிலும் செலவு கூடும் நாள். உறவினர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர். நண்பர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மிதுனம்: நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணங்கள் செல்ல வழிவகுக்கும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

கடகம்: சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அதிசயிக்கும்படி உங்கள் செயல் அமையும்.

சிம்மம்: இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரலாம். பெற்றோர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

துலாம்: பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். உடன்பிறப்புகளின் வழியே சுபச்செய்தி வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். தொழில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

விருச்சிகம்: யோகமான நாள். தொழில் வளர்ச்சி உண்டு. எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரலாம். கல்யாண கனவுகள் நனவாகலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

மகரம்: விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களை திடீரென மாற்றுவீர்கள்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். கடல் பயண வாய்ப்புகள் தள்ளிப்போகலாம். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

மீனம்: மங்கலச்செய்தி மனைதேடி வரும் நாள். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள்.


Next Story