இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் பகற்பத்து உற்சவ சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-28 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை பின்னிரவு 3.௦3 மணி வரை, பிறகு திருதியை
நட்சத்திரம்: மூலம் காலை 11.42 மணி வரை, பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
இன்று சுப முகூர்த்த நாள். சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சிறப்புலி நாயனார் குரு பூஜை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் பகற்பத்து உற்சவ சேவை. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ராஜாங்க சேவை. அகோபில மடம் ஸ்ரீமத் 43-வது பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி, குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்- நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சி திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் உண்டு.
ரிஷபம்- விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.
மிதுனம்- வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்- யோகமான நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும் வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்- வாய்ப்புகள் வாயில்தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்று நினைப்பீர்கள். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும்.
கன்னி- பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி சிறுதி தொகையை செலவிடுவீர்கள்.
துலாம்- தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் தனவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும்.
விருச்சிகம்- தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர்.
தனுசு- வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். சகோதர ஒற்றுமை பலப்படும்.
மகரம்- வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புகளால் உதவி கிடைக்கும்.
கும்பம்- சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்யநேரிடும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
மீனம்- சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.