இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி தெப்பத்தில் பவனி.

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-29 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திருதியை நள்ளிரவு 1.13 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: பூராடம் காலை 10.39 மணி வரை. பிறகு உத்திராடம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீகூடலழகர், திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் தலங்களில் திருமொழித் திருநாள் தொடக்கம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி தெப்பத்தில் பவனி. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

ராசிபலன்

மேஷம்- தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.

ரிஷபம்- கூட இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மிதுனம்- இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடிதப் போக்குவரத்தால் கவலைகள் அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கடகம்- ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்துலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.

சிம்மம்- நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் உங்கள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னி- வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்திதரும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிரிந்தவர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள்.

துலாம்- இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

விருச்சிகம்- வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பிய படியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு.

தனுசு- எதிரிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

மகரம்- மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர். அயல் அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.

கும்பம்- வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

மீனம்- கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.


Next Story