இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-30 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி இரவு 11.09 மணி வரை, பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.25 மணி வரை, பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
இன்று சதுர்த்தி விரதம். திருவோண விரதம். குச்சனூர் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர் கோவில்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
ராசிபலன்
மேஷம்- எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
ரிஷபம்- செய்தொழிலில் புதியவர்களை சேர்த்து மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை தொடருவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டு முயற்சி கைகூடும்.
மிதுனம்- மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோக மாற்றங்களை செய்யும் எண்ணம் உருவாகும்.
கடகம்- நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்- வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழப்பங்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
கன்னி- சோர்வுகள் அகலும் நாள். துடிப்புடன் செயல்படுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்துசேரும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்- நண்பர்கள் நல்ல தகவல்களை கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கடன் பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்- மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்துமுடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசிவழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
தனுசு- யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வரவு போதுமானதாக இருக்கும்.
மகரம்- சுபகாரிய பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
கும்பம்- நெருக்கடி நிலை மாறும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும்.இல்லம் தேடி நல்லவர்கள் வருவர். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.
மீனம்- ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களிடம் பழகும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.