இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-15 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தி மாலை 4.40 மணி வரை, பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 6.17 மணி வரை, பிறகு பூசம்.

யோகம்: சித்த, மரணயோகம்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

ராசிபலன்

மேஷம்- அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு முடிவாகும்.

ரிஷபம்- வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மிதுனம்- நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

கடகம்- உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர்.

சிம்மம்- யோகமான நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் லாபம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டும் புகழும் கூடும்.

கன்னி-நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவொன்று கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் கையிருப்பு கரையலாம்.

துலாம்-நன்மைகள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்- காலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். மறதி அதிகரிக்கும். மனக்குழப்பம் அகலும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு- யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிகரிக்கும்.

மகரம்- செலவுகள் கூடும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம்.

கும்பம்- வரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். உறவினர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

மீனம்- வளர்ச்சி மேலோங்கும் நாள். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.


Next Story