இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-16 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பஞ்சமி பிற்பகல் 2.08 மணி வரை, பிறகு சஷ்டி

நட்சத்திரம்: மகம் காலை 8.36 மணி வரை, பிறகு பூரம்

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல். திருத்தணி படித்திருவிழா. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி சாற்றுமுறை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: நேசம் மிக்கவர்களின் பாச மழையில் நனையும் நாள். நினைத்தது நிறைவேறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வீடுமாற்றம், இடமாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும்.

ரிஷபம்: சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

மிதுனம்: யோகமான நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.

கடகம்: பொருளாதார நிலை திருப்தி தரும் நாள். புதிய பாதை புலப்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி செய்வர். அயல்நாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.

சிம்மம்: கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்புக் கிடைத்து மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.

கன்னி: முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வரலாம். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்: தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பயணத்தால் ஆதாயம் உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.

விருச்சிகம்: ஆலய வழிபாட்டால் ஆர்வம் கூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.

தனுசு: குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும்.

மகரம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துவர மறுப்பர். பயணங்களால் விரயம் உண்டு.

கும்பம்: கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை உயர் அதிகாரிகள் கற்றுக்கொடுப்பர். தொழிலில் மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக முடிவடையும். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story