இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருநெல்வேலி நெல்லையப்பர் திருவீதி உலா நடைபெறுகிறது.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-10 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பவுர்ணமி நாளை விடியற்காலை 6.07 மணி வரை, பிறகு பிரதமை

நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 10.57 மணி வரை, பிறகு திருவாதிரை

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று பவுர்ணமி. ஆருத்ரா அபிஷேகம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி நெல்லையப்பர் திருவீதி உலா. சங்கரன்கோவில் சிவபெருமான் ரதோற்சவம். சிதம்பரம் ஆனந்தநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாமசுந்தரி ரதோற்சவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் இராபத்து உற்சவ சேவை. இரவு வெள்ளி ரதத்தில் பவனி. திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப் பிரகார உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்: ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.

மிதுனம்: திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். உறவினர் பகை உருவாகலாம்.

கடகம்: இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம். நூதன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

சிம்மம்: வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

கன்னி: முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.

துலாம்: நட்பு பகையாகும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று நினைப்பீர்கள். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.

தனுசு: வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்து தகராறுகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை தருவார்கள்.

மகரம்: மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கும்பம்: உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமையும் நாள். பொது வாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மீனம்: திறமை பளிச்சிடும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணை பணிபுரியுமிடத்திற்கே உங்களுக்கு மாறுதல் கிடைக்கும்.


Next Story