இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-13 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: துவிதியை பிற்பகல் 2.51 மணி வரை, பிறகு திருதியை

நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 3.21 மணி வரை, பிறகு திருவாதிரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சுப முகூர்த்த தினம். திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

ராசிபலன்

மேஷம்: மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.

ரிஷபம்: ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.

மிதுனம்: முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கடகம்: தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள்.

சிம்மம்: துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லைகள் அகலும். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவுக்கு வரும்.

கன்னி: தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

துலாம்: அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

விருச்சிகம்: விரயங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சியில் எதிரிகளின் குறுக்கீடுகள் உண்டு.

தனுசு: மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வெளிவட்டார தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மகரம்: அதிரடியாக முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்: நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.

மீனம்: கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.


Next Story