இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-24 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திரயோதசி இரவு 9.14 மணி வரை பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: கேட்டை இரவு 8.17 மணி வரை பிறகு மூலம்

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று பிரதோசம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் பவனி. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ரிஷபம்: எண்ணங்கள் நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

சிம்மம்: குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கன்னி: முன்யோசனையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணவேண்டிய நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்களா என்பது சந்தேகம்தான்.

துலாம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். இருப்பினும் செலவு நடைகளும் அதிகரிக்கும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம்.

விருச்சிகம்: யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

தனுசு: திறமை பளிச்சிடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழிலில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

மகரம்: வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

கும்பம்: புதிய திருப்பங்களை சந்திக்கும் நாள். முயற்சிகளில் வெற்றிகிட்டும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மீனம்: கல்யாண முயற்சி கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும்.


Next Story