இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, தை 17 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பஞ்சமி இரவு 9.46 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 11.16 மணி வரை பிறகு சித்திரை

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு. கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-செல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப்பணி தொடரும்.

ரிஷபம்-பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்திற்காக செலவிடுவீர்கள். படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

மிதுனம்- திருமண முயற்சி கைகூடும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடுதேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடிதப் போக்குவரத்து கவலையை போக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

கடகம்- தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தியொன்று தூரத்தில் இருந்து தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.

சிம்மம்- வருமானம் திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

கன்னி- சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்- பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான சில காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்து காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

விருச்சிகம்- உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு- பிரச்சினைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். புண்ணிய காரியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்- வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். வியாபாரத்திலுள்ள நுணுக்கங்களை அறிந்துகொள்வீர்கள்.

கும்பம்- யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடை ஏற்படும். சகோதரர்களாலும், நண்பர்களாலும் விரயங்கள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

மீனம்- மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். குடும்பத்தினர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பயணங்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.


Next Story