நடிகர் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம்


நடிகர் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம்
x

மன்னார்குடியில் உள்ள குலதெய்வ கோவிலில் நடிகர் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர்

மன்னார்குடி;

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேட்டை திடல் கிராமத்தை பூர்வீகமாக கொண்டது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பம். இவர்களது குல தெய்வமான அங்காளம்மன் கோவில் மன்னார்குடி புதுப்பாலம் பகுதியில் உள்ளது. சிவாஜி கணேசன் குடும்பம் தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையில் வசித்தனர். சிவாஜிகணேசன் குடும்பத்தினர் சென்னையில் வசித்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த குலதெய்வ கோவிலுக்கு அதிகாலையில் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். மேலும் தங்களது குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதன்படி நடிகர் பிரபு மன்னார்குடி புதுப்பாலம் பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி புனிதா, மகன் விக்ரம் பிரபு, அவருடைய மனைவி லக்குமி உஜ்ஜெய்னி, அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த நடிகர் பிரபுவுடன் பக்தர்கள் போட்டோ மற்றும் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

மன்னார்குடியில் உள்ள குலதெய்வ கோவிலில் நடிகர் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.


Next Story