ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்பத்திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்பத்திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது.

தூத்துக்க்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த மாதம் 24ம் தேதி ஐந்தாம் திருவிழாவில் கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

திருவிழாவின் ஒன்பதாம் நாளில் கடந்த 28ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் இரவில் சுவாமி பொலிந்துநின்ற பிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெற்றது.

முன்னதாக சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியர்களுடன் நேற்று மாலை 6.30 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்ப குளத்திற்கு வந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story