அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்


Prasanna Venkateswara Swamy temple, Appalayagunta
x

பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெறும்.

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் நிகழ்வான ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடைபெற உள்ளது. கோயில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இணைந்து கோவில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

பாரம்பரிய வழக்கப்படி மேற்கொள்ளப்படும் ஆலய சுத்திகரிப்புக்குப் பிறகு, 11.00 மணிக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெறும். முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெறும். கல்யாண உற்சவ நிகழ்வில் தம்பதிகள் 500 ரூபாய் டிக்கெட் பெற்று கலந்துகொள்ளலாம்.


Next Story
  • chat