முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் தேரோட்டம்


முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் தேரோட்டம்
x

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 22-ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெற்றன.11-ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அய்யாவழி பக்தர்கள் தேரை இழுக்கும் போது சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு, நெற்றியில் நாமம் இட்டு "அய்யா சிவசிவா அரகரா" என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர்.

நாளை (2-ந்தேதி) அதிகாலை திருக்கொடி இறக்குதலும், அதைத்தொடா்ந்து தானதா்மங்களும் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனா்.


Next Story