பவுர்ணமியை முன்னிட்டு பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்


பவுர்ணமியை முன்னிட்டு பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
x

பவானி கூடுதுறையில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

பவானி:

பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் பின்னால் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் இங்கு அதிகம் வருவர். காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறை காவேரி ஆற்றில் புனித நீராடி பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.


Next Story