ஆவணித்திருவிழா கொடியேற்றம்

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மாதம் நடக்கும் தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 10-ம் திருவிழாவான வருகிற 7-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பெருமாள் பக்தர்கள் குழு மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






