ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் வருகிறது?


ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் வருகிறது?
x

ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம், வட மொழியில் ஜோஷ்டா மாதம் என அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக இருக்கும் ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. ஏனெனில் இந்த மாதத்தில் மட்டும் 32 நாட்கள் வரும். தமிழ் மாதங்களைப் பொறுத்தவரை, ஒரு மாதம் 30 நாட்களையும், அடுத்த மாதம் 31 நாட்களையும் கொண்டதாகவே தொடர்ந்து வரும். இதில் ஆனி மாதமும், மார்கழி மாதமும் மட்டும் விதிவிலக்கு. ஆனிக்கு 32 நாட்கள், மார்கழிக்கு 29 நாட்கள். இதில் ஆனி மாதத்திற்கு ஏன் 32 நாட்கள் என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

சூரியனின் வடதிசை பயண காலமாக குறிப்பிடப்படுவது 'உத்தராயன புண்ணிய காலம்.' தை முதல் ஆனி வரையான இந்த காலகட்டத்தின் கடைசி மாதமாக ஆனி இருக்கிறது. உத்தராயன புண்ணிய காலமான 6 மாதமும் தேவர்களுக்கு பகல் பொழுது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதை கொண்ட மாதமாக ஆனி மாதம் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும்.

சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி. எனவே இதனை 'மிதுன மாதம்' என்றும் சொல்வார்கள். வடமொழியில் இதற்கு 'ஜோஷ்டா மாதம்' என்று பெயர். 'ஜோஷ்டா' என்பதற்கு 'மூத்த' அல்லது 'பெரிய' என்று பொருள். மிதுன ராசியானது சற்றே பெரிய ராசி என்பதால், இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவது, இந்த ஆனி மாதத்தில் 32 நாட்கள் வருவதற்கு காரணம் என்று ஜோதிட ரீதியான பதில் சொல்லப்படுகிறது.


Next Story