பரவசமூட்டும் பச்சையம்மன


பரவசமூட்டும் பச்சையம்மன
x

மலேசியா என்றாலே பலரின் நினைவுக்கு வருவது, அங்குள்ள பிரமாண்டமான முருகன் சிலையும்,பத்துமலை மீது அமைந்துள்ள முருகன் ஆலயமும் தான்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பிரமாண்டமான சிலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், எப்போதும் அதற்கு முன்னோடியாக திகழ்வது, மலேசியாதான். இந்த நிலையில் மலேசியாவின் தைபிங் என்ற இடத்தில் மற்றொரு பிரமாண்டமான ஆலயம் அமைந்திருக்கிறது. பத்துமலை முருகன் கோவிலைப் போல, இந்த ஆலயமும் நாளடைவில் மலேசியாவின் முக்கியமான ஆன்மிக சுற்றுலாத்தலமாக உலகப் புகழ்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

2016-ல் தான் இந்த பிரமாண்டமான ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது என்றாலும், இந்த ஆலயத்தில் அருளும் மூலவர் அம்மன் சுமார் 150 வருடங்களுக்கும் மேலாக இந்த இடத்தில் இருந்து அருள்பாலிப்பதாகச் சொல்கிறார்கள்.மலேசியாவில் அமைந்த முதல் ரெயில்வே கட்டுமானத்தில் பணியாற்றுவதற்காக, பல தமிழர்கள் மலேசியா சென்றனர். மிக நீண்டப் பணி என்பதால் அவர்கள் அனைவரும் அங்கேயே குடியேறினர்.

1885-ல் இந்த மக்கள்,பெராக் என்ற நகரத்தில் குடியேறியபோது, தங்களின் பூர்வமூலவர் பச்சையம்மன் முன்பு உள்ள அய்யனார் மகா பராசக்தி பச்சையம்மன் கோவிலுக்கு அருகில், அதே வளாகத்தில் 'ஆற்றங்கரை கதிர்வேல் முருகன் கோவில்' என்ற பெயரில் முருகன் ஆலயமும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் முன் பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இந்த ஆலயத்தின் இறைவனும் வழிபாட்டில் தான் இருக்கிறாராம். முன்காலத்தில் இந்த ஆலயத்தில் வேல் மட்டுமே வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கிறது. பின்னாளில்தான் இந்த ஆலயத்தில் மூலவராக முருகப்பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். வேல் வழிபாட்டை நினைவுகூரும் வகையில் இந்த ஆலயத்தின் முன் பகுதியில் மிக உயரமான வேல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.இந்த ஆலயத்தின் உட் பகுதியில் சூரியன், சந்திரன், கணபதி, சிவன்,அம்மன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, பிரம்மன், தட்சிணாமூர்த்தி, முனிவர்கள், ஞானிகள் என பலருக்கும் சிறுசிறு சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயத்தின் உட் பகுதியில் இந்த ஆலயத்தை அமைக்க காரணமாக அமைந்த ஒரு சித்தரின் ஜீவ சமாதியும் இருக்கிறது.ஆற்றங்கரை கதிர்வேல் முருகன் மண்ணில் வழிபட்டது போல, ஒரு மாரியம்மன் சிலையை, அங்கும் நிறுவி அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் 'பச்சையம்மன்' வழிபாடு மிகவும் விசேஷம். அப்படி பச்சையம்மனாகத் தான், பெராக் நகரத்தில் உள்ள அம்மன் நிறுவப்பட்டிருக்கிறார். கயிலையில் சிவனின் கண்களை பார்வதி தேவி தன் கைகளைக் கொண்டு மூடியதால், உலகமே ஒரு கணம் இருண்டு போனது. சிவனுக்கு ஒரு கணம் என்பது பூலோக உயிர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் என்பதால், பூலோகத்தில் உயிரினங்கள் பெரும் துன்பத்தைசந்தித்தன. இந்த பாவத்தில்இருந்து விடுபடுவதற்காக பார்வதி தேவி, பூலோகத்திற்கு வந்து தவம் செய்தாள். அப்படி அவர் தவம் செய்ய வந்த போது, வறட்சியாக இருந்த இடங்கள் பசுமையாக மாறின.

அனைத்தும் பச்சைப்பசேல் என்று கண்களுக்கு விருந்தாகின. இதனால் அந்த அன்னை 'பச்சையம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தவம் செய்யும் அன்னைக்கு காவலாக சிவனும், விஷ்ணுவும் முனிவர்களாக வந்துஅமர்ந்தனர் என்றும், இத்தல பச்சையம்மனுக்கு தல வரலாறு சொல்லப்படுகிறது.

சுமார் 150 வருடங்களாக சிறிய கோவிலில் குடிகொண்டிருந்த அம்மனுக்கு,தைபிங் என்ற இடத்தில் உள்ள ஆற்றங்கரையில் பிரமாண்டமான ஆலயம் கட்டப்பட்டது. 'மகா பராசக்தி பச்சையம்மன் கோவில்' என்று அழைக்கப்படும். இந்த ஆலயம்,கடந்த 2016-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த ஆலயம் பச்சையம்மனின் பெயருக்கு ஏற்றார் போல் பச்சை வண்ணத்தில் காணப்படுகிறது.

ஆலயத்தின் முன் மண்டபம், அம்மனின் கருவறை உள்பட,ஆலயம் முழுவதும் பச்சை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.ஆலயத்தின் இரு பக்கமும் சிவனும், விஷ்ணுவும் முனிவர்களாக அமர்ந்திருக்கின்றனர்.இடது பக்கம் உள்ள நுழைவு வாசல் வழியாக உள்ளேசென்று அம்மனை தரிசித்து விட்டு, வலது பக்கம் உள்ள வாசல் வழியாக வெளியே வரும் வகையில் ஆலய கட்டிடம் அமைந்துள்ளது. அப்படி ஒரு வாசல் வழியாக நுழைந்து நடுவில் உள்ள அம்மனைதரிசித்து, பின்னர் திரும்பி மறு வாசல் வழியாக வரும், அந்த இரண்டு பக்கங்களிலும் அம்மனின் பல்வேறு வடிவங்கள் சிலையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

கருவறையில் மூலவராக பச்சை நிறத்தில் சிலை வடிவமாக அம்மன் வீற்றிருக்கிறார். இவர் சுமார் 4 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். அம்மனின் கருவறை விமானம், மேரு மலையின் வடிவத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.பொதுவாக ஆலயத்தின் முகப்பில் ராஜகோபுரம் இருக்கும். ஆனால் இங்கு ராஜகோபுரம் இல்லை. அதற்கு பதிலாக கோவிலோடு இணைந்து முன் மண்டபத்தின் நடுப்பகுதியில் 68 அடி உயரத்தில் பிரமாண்டமான பச்சையம்மன் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தின்சிறப்பை உயர்த்தும் வகையில் அமைந்த சிலை இதுதான். பச்சை நிறத்தில் காட்சிதரும் இந்த அம்மன், பச்சைபட்டு உடுத்தி வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடித்து வைத்தும், கருவறையில் வீற்றிருக்கும் அம்மனைப் போலவே அருட்காட்சி தருகிறார்.நான்கு கரங்களுடன் காட்சி தரும் இந்த அன்னை, தன்னுடைய பின் இரு கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், முன் வலது கரத்தில் அபய ஹஸ்தமும், இடது கரத்தில் வரத ஹஸ்தமும் தாங்கியிருக்கிறார். இந்தஅன்னையின் முன்பாக குறுக்காக மிகப்பெரிய சூலமும் பொருத்தப்பட்டுள்ளது. அம்மன் கோவிலுக்கு முன்பாக,பிரமாண்டமான அய்யனார் சிலையும் உள்ளது.


Next Story